7.6 C
Scarborough

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை அரசாங்கம் வரவேற்பு!

Must read

மேற்காசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.

இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தப் போர்நிறுத்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், மக்களின் துன்பங்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள ஒரு முக்கியமான தீர்மானம் என இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தரமான தீர்வினை நோக்கிச் செயற்பட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு  அனைத்து தரப்பினரையும் இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையை  சாத்தியமாக்குவதற்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எளிதாக்குவதில் முக்கிய பங்காற்றிய அனைத்து தரப்பினரது  இராஜதந்திர முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article