9.7 C
Scarborough

மெக்சிகோ வன்முறை தாயகம் திரும்ப முடியாமல் அவதிப்படும் கனடிய தம்பதி !

Must read

மெக்சிகோவின் (Mexico) Puerto Vallarta பகுதியில் வெடித்துள்ள வன்முறை காரணமாக, அங்கு சுற்றுலா சென்றிருந்த கனடியர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

(B.C.) மாகாணத்தைச் சேர்ந்த Ryan Voutilainen மற்றும் அவரது மனைவி, திட்டமிட்டபடி நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

Zona Romantica பகுதியில் தங்கியுள்ள அவர்கள், சாலைகளில் வாகனங்கள் எரிக்கப்படுவதையும், ஹெலிகாப்டர் மற்றும் பொலிஸ் ரோந்துப் பணிகளையும் கண்டு இவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக அவர்கள் தற்போது தற்காலிக ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

கனடிய அரசாங்கத்தின் ROCA அமைப்பில் தங்களைப் பதிவு செய்துள்ள இவர்கள், பாதுகாப்பான கட்டிடத்திற்குள் தங்கியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், நிலைமை சீராகும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article