முன்னாள் அமைச்சர்கள் மூவரின் சொத்துக்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவின் வழிநடத்தலின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய மஹிந்தானந்த அளுத்கமகே, அனுர பிரியதர்ஷன யாப்பா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
முன்னாள் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு நேற்று திங்கட்கிழமை (18) அழைக்கப்பட்டிருந்த போதிலும் தனிப்பட்ட காரணங்களால் வருகை தர முடியாது என அவர் அறிவித்திருந்தார்.