அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தகப் போர் காரணமாக இந்த குளிர்காலத்தில் தான் Florida செல்லப்போவதில்லை என்றும், அதற்கு பதிலாக மக்கள் உள்ளூரிலேயே சுற்றுலாவுக்காக செலவிட வேண்டும் என்றும் Ontario முதல்வர் Doug Ford கூறியதையடுத்து, Florida ஆளுநர் Ron DeSantis அவருக்குக் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்.
திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய Ford இடம், அமெரிக்க அதிபர் Donald Trump பின் வரிவிதிப்புகளால் எல்லைக்கு தெற்கே உள்ள பயண இடங்களை புறக்கணிக்க பல கனடியர்கள் தேர்வு செய்துள்ளதால், வழக்கம்போல இந்த குளிர்காலத்திலும் Florida விற்கு செல்வீர்களா என்று கேட்கப்பட்டது.
பதிலளித்த Ford, உண்மையை சொல்லப்போனால், நான் Florida விற்கு செல்லாத முதல் முறை இதுவாகத்தான் இருக்கும்,” என்றார். மேலும் அவர், இந்த முடிவு “எனது தனிப்பட்ட விருப்பம், என்னால் இப்போது அங்கு செல்ல முடியாது,” என்றும் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பயணச் செலவுகளை உள்ளூர் சுற்றுலாவுக்காக செலவிடுமாறு Ford மக்களை ஊக்குவித்தார். அதே வேளையில், குடும்பத்தைப் பார்க்கவோ அல்லது பிற அவசியத் தேவைகளுக்காகவோ அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தால், Trump உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க வர்த்தகப் போருக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களை வெளியிட்டுவரும் முதல்வர், உலகத் தொடர் (World Series) போட்டியின் போது, இறக்குமதி வரிகளினால் ஏற்படும் தீமைகள் குறித்து முன்னாள் அதிபர் Ronald Reagan பேசும் ஒரு விளம்பரத்தையும் ஒளிபரப்ப அவர் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

