நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மீளமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளம் இம்மாதம் 26ஆம் திகதி மக்கள் பாவனைக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறைபாடுகளுடன் செயற்பட்ட அரசாங்கத்தின் தொழிற்சாலைகளில் உப்பு உற்பத்தியின் போது அயடின் சேர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடனான நவீன மயப்படுத்தப்பட்ட இந்த ஆனையிறவு தொழிற்சாலை ஊடாக 26ஆம் திகதியில் இருந்து நுகர்விற்காக உப்பு சந்தைக்கு அனுப்பப்படும்.