16.4 C
Scarborough

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20

Must read

சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடை​பெற்​றது.

கிரிக்​கெட் ரசிகர்​களின் போதிய ஆதர​வின்​மை, ஸ்பான்​சர்​ஷிப் ஆகிய பிரச்​சினை​கள் காரண​மாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்​து​வ​தாக ஐசிசி அறி​வித்​தது. இந்​நிலை​யில் சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்​டும் நடத்த ஐசிசி அனு​மதி அளித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. அடுத்த ஆண்டு செப்​டம்​பரில் இத்​தொடர் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக​வும் ஐசிசி வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன. உலகம் முழு​வதும் நடை​பெறும் டி20 லீக் தொடர்​களில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணி​கள் இந்த தொடரில் பங்​கேற்க உள்​ளன. கடைசி​யாக நடை​பெற்ற சாம்​பியன்ஸ் லீக் டி20 தொடரில் சிஎஸ்கே அணி பட்​டம் வென்​றிருந்​தது.

செய்தித்துளிகள்: சுவிட்சர்லாந்தில் உள்ள ஜிஸ்டாட் நகரில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தான் வீரர் அலெக்சாண்டர் பப்ளிக் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் பப்ளிக் 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினா வீரர் ஜுவான் மானுவலை வீழ்த்தினார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலி இருந்திருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றிருக்கும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீவ் ஹார்மிசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மீண்டும் இடம்பெறுவதற்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி விளையாடவுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ள பெங்கால் அணியில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இன்று முதல், அந்த அணியுடன் சர்வதேச டி20 தொடரில் விளையாடவுள்ளது. டி20 தொடரில் பங்கேற்கும் அணியையும் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. முதல் போட்டி இன்று கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறும். ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக உள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article