8.7 C
Scarborough

மீண்டும் உச்சத்தை எட்டும் கனடாவின் வேலையின்மை விகிதம்!

Must read

அமெரிக்க வரி விதிப்புகளால் கனடாவின் உற்பத்தி துறை பாதிக்கப்பட்டதனால் ஏப்ரல் மாதத்தில் தேசிய வேலையின்மை விகிதம் 6.9 சதவீதமாக உயர்ந்ததாக கனடாவின் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பின்னர் மீண்டும் இந்த உச்சத்தை எட்டியுள்ளது. 2017 ஜனவரி மாதத்தின் பின்னர் தொற்றுநோய் நிலவிய காலங்களில் கூட கனடாவின் வேலையின்மை விகிதம் இந்தளவு அதிகரித்ததில்லை என்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததை விட இது ஒரு தலைகீழ் மாற்றம் என்று StatCan குறிப்பிடுகின்றது. அப்போது வலுவான வேலைவாய்ப்பு அதிகரிப்பு சனத்தொகை வளர்ச்சியுடன் இணைந்திருந்தது. ஆனால் தற்போது வேலையின்மை விகிதம் சனத்தொகையை வளர்ச்சியை விட அதிகரித்து விட்டது. கனடாவின் உற்பத்தித்துறை ஏப்ரல் மாதத்தில் பெருமளவான வேலை இழப்புகளை சந்தித்தது இதில் பெரும்பகுதி ஒன்றோரியோவில் ஏற்பட்டது.

கனடா மீது அமெரிக்கா விதித்த வரிகளில் மார்ச் மாதம் முதல் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் CUSMA-இற்கு இணங்காத இறக்குமதிகள் மீது அமெரிக்கா விதித்த இரும்பு, அலுமினியம் மற்றும் வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளே கனடாவின் வேலையின்மை அதிகரிப்பிற்கு பிரதான காரணமாக அமைந்தது. இதனிடையே மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறையும் ஏப்ரல் மாதத்தில் சுமார் 27,000 வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் காட்டுகின்றது.

கடந்த மாதம் ஏற்பட்ட சரிவை ஈடுசெய்யும் வகையில் பொது நிர்வாக துறையில் [Public administration] 37,000 வேலை வாய்ப்புகள் அதிகரித்தன, ஆயினும் இது ஏப்ரல் மாத பொதுத்தேர்தலுடன் தொடர்புடைய தற்காலிக வேலை வாய்ப்பாகும். தற்போது கனடாவில் சீரற்ற அமெரிக்க வர்த்தக தொடர்புடைய பொருளாதார நிச்சயமற்ற தன்மை நிலவுகின்ற போதிலும் பெரும்பாலான தொழிலாளர்கள் தங்கள் வேலைகளில் பாதுகாப்பாக உள்ளமை கனடாவைப் பொறுத்தவரை ஆறுதலளிக்கும் விடயமாகும்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article