22.5 C
Scarborough

மிருசுவிலில் கொழும்பு சொகுசு பேருந்து விபத்து; இருவர் படுகாயம்!

Must read

பஸ்ஸில் இருந்தவர்கள் ஒரு மணித்தியால போராட்டத்தின் பின்னர் மீட்பு!

அதிநவீன பயணிகள் சொகுசு பஸ்ஸும், சிறிய ரக உழவு இயந்திரமும் (ட்ரக்டர்) மோதுண்டதில் படுகாயம் அடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று புதன் கிழமை (18) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து பயணித்த அதிநவீன சொகுசு பஸ்ஸூம், அதே திசையில் பயணித்த மரப் பலகைகளை ஏற்றிய உழவு இயந்திரமும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் உழவு இயந்திரத்தின் சாரதியும், சொகுசு பஸ்ஸின் நடத்துனருமே படுகாயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சொகுசு பஸ்ஸின் முன் பகுதி முற்றாக சேதமடைந்ததால் சாரதி மற்றும் பஸ்ஸில் இருந்தவர்களை பொதுமக்கள் சேர்ந்து ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் மத்தியில் மீட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article