17.3 C
Scarborough

மியன்மாரில் இராணவத்தின் தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு

Must read

மியன்மாரில் இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மொகோக் நகரில் கிளர்ச்சியாளர்கள் தங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், கர்ப்பிணிப்பெண் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர்.

ராணுவம் நடத்திய தாக்குதலை ஆயுதமேந்திய போராட்டக்காரர்கள்மற்றும் உள்ளூர்வாசிகள் உறுதி செய்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால்,உயிரிழப்புக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மியான்மரில் கடந்த 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றனர். இதனால் இராணுவத்திற்கு எதிராக பழங்குடியினர் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article