2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு வருமானம் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.
இதன்படி, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கிடைத்த வெளிநாட்டு பணப்பரிமாற்றம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட மொத்த வெளிநாட்டு பணப்பரிமாற்றம் 2.29 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் எனவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீத அதிகரிப்பு எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

