நிலையில், கனடாவின் மாகாண முதலமைச்சர்கள் இன்று முஸ்கோகாவில் ஒன்டாரியோ முதல்வர் டக் போர்ட் தலைமையில் மூன்று நாட்கள் கூட்டங்களை ஆரம்பிக்கின்றனர்.
மாகாண மற்றும் பிராந்தியத் தலைவர்கள் திங்கள்கிழமை நண்பகல் ஒன்றுகூடலை தொடங்கினர். கனடாவின் நெருங்கிய நட்பு நாடு மற்றும் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியுடனான வர்த்தகப் போர் தொடர்வதால், உள்நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதுகாத்தல், தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்களை முன்னேற்றுதல் மற்றும் தடைகளை உடைப்பதன் மூலம் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகியவை அவர்களின் பேச்சுவார்த்தைகளின் பிரதான அம்சங்களாகும்.
இந்த உரையாடலைத் தொடங்குவதற்கு ஏதுவாக, திங்கட்கிழமை பிற்பகல் மாகாண முதல்வர்கள் தேசிய பழங்குடி அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
அமெரிக்காவுடன் July 21 ஆந் திகதி ஒப்பந்தமொன்றை எட்டவுள்ளதாக ஆரம்பத்தில் உடன்பாடு காணப்பட்ட போதும், தற்போது குறித்த காலப்பகுதி கடந்த நிலையில் இரு நாடுகளும் August 01 என்ற இலக்கை நோக்கி நகர்கின்றன இந்த திகதியிலேயே கனடாவின் பொருட்களுக்கு எதிராக அமெரிக்கா 35 சதவீத வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாகாண முதலமைச்சர்களுடனான சந்திப்பை தொடர்ந்து, பிரதமர் Carney பேச்சுவார்த்தைகளின் நிலை மற்றும் அமெரிக்க நிர்வாகத்தின் அதிகரிக்கும் கட்டண அச்சுறுத்தல் குறித்து ஒரு புதிய முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை கட்டணமில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சு இனி இல்லை என்று Carney ஒப்புக்கொண்ட நிலையில், அந்தந்த பிராந்தியங்களில் உள்ள வேலைகள் மற்றும் தொழில்கள் தொடர்பில் இது எவ்வாறான பிரதிபலிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து பிரதமரிடம் சில அழுத்தமான கேள்விகளை மாகாண முதல்வர்கள் கேட்கவும் வாய்ப்புள்ளது.
இதைவிட புதன்கிழமை வரை நீடிக்கவுள்ள இந்த கலந்துரையாடல் எரிசக்தி பாதுகாப்பு, பிணை சீர்திருத்தம் போன்ற பொது பாதுகாப்பு விடயங்கள், மாகாணங்கள் காட்டுத்தீயை எதிர்கொள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள், குடியேற்றம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்தும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.