0.9 C
Scarborough

மாகாண முதல்வர்களை சந்திக்கிறார் பிரதமர்!

Must read

மூத்த அரசாங்க உயர்மட்ட தரவுகளின் படி, இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தம் (CUSMA) மீளாய்விற்கு வரவுள்ள நிலையில், பிரதமர் Mark Carey இந்த மாத இறுதியில் Ottawa வில் மாகாண முதல்வர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

​January 29 அன்று நடைபெறவுள்ள இந்த முதலமைச்சர்களின் கூட்டம், கடந்த கூட்டத்திற்கு ஒரு மாதத்திற்குப் பின்னர் நடைபெறுகிறது. கடந்த கூட்டத்தில் Ottawa வில் பிரதமருடன் நேரடியாகக் கலந்துகொண்ட Ontario முதல்வர் Doug Ford தவிர, ஏனையவர்கள் இணைய வழியாகப் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் கூற்றுப்படி, இரும்பு, அலுமினியம் மற்றும் வனத்துறை மீது விதிக்கப்பட்டுள்ள கடுமையான வரிச் சுமைகளிலிருந்து அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்றே தோன்றுகிறது.

December மாதம் அமெரிக்க காங்கிரஸில் பேசிய Greer, CUSMA ஒப்பந்தம் “ஓரளவு வெற்றி பெற்றுள்ளது” என்றும், ஆனால் அதை நீட்டிக்க சில மாற்றங்கள் தேவை என்றும் கூறினார். வர்த்தகம் தொடர்பான Trump பின் முக்கிய அதிகாரியின் கூற்றுப்படி, அமெரிக்க மதுபானங்கள் மீதான புறக்கணிப்பு, கனடாவின் பால் பண்ணை துறைக்கான ஒதுக்கீடு முறை, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களைப் பாதிக்கும் online streaming சட்டம் போன்ற அம்சங்கள் இன்னும் பெரும் தடைகளாகவே உள்ளன என்றார்.

மாகாண அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் தகவலின்படி, பிரதமரை சந்திப்பதற்கு முதல் நாள், கனடாவின் 13 மாகாண மற்றும் பிராந்திய முதல்வர்களும் தங்களுக்குள் ஒரு தனிப்பட்ட கூட்டத்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article