1.8 C
Scarborough

மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகள் நீக்கம்!

Must read

கனடா முழுவதும் வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்க அனுமதிக்கும் வகையில், வர்த்தக தடைகளை குறைக்க அனைத்து மாகாணங்கள், பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

British Columbia வின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி அமைச்சர் Ravi Kahlon, Victoria வில் வைத்து இந்த ஒப்பந்தத்தை அறிவித்தார். இது புதன்கிழமை Yellowknife இல் நடைபெற்ற கூட்டத்தில் நாட்டின் வர்த்தக அமைச்சர்களால் கையெழுத்தானது.

கனடாவின் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தத்திற்கான தேசிய அளவிலான முன்னெடுப்பை British Columbia அரசாங்கம் முன்மொழிந்து தலைமை தாங்கியது, மேலும் இது கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய சிவப்பு நாடா குறைப்பு என்று Kahlon கூறுகிறார்.

இந்த ஒப்பந்தம் அடுத்த மாதம் அமுலுக்கு வரும், அத்துடன் உணவு, பானங்கள், புகையிலை, தாவரங்கள் மற்றும் விலங்குகள் இவற்றுள் உள்ளடக்கப்படவில்லை என்றாலும், ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு இது பொருந்தும்.

இந்த ஒப்பந்தம் குறித்து ஒரு அறிக்கையில், இது ஒரு எளிய கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும், ஒரு மாகாணம் அல்லது பிராந்தியம் ஒரு பொருளை சட்டப்பூர்வமாக விற்க முடிந்தால், மேலதிக வரையரைகளோ அல்லது அனுமதிகளோ இல்லாமல் மற்றொரு மாகாணத்தில் விற்கலாம் என்று கூறுகிறது.

இது ஒரு மைல்கல் சாதனை என்று கூறும் Canadian Federation of Independent Business இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை பாராட்டுவதாகவும் இது இறுதியாக விலையுயர்ந்த உள்நாட்டு வர்த்தகத் தடைகளை உடைக்கத் ஆரம்பிக்கும் என்றும் கூறுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article