5.1 C
Scarborough

மஹிந்த தோற்றதால்தான் இலங்கை வீழ்ந்தது: மொட்டு கட்சி சுட்டிக்காட்டு!

Must read

” 30 வருடகாலம் நிலவிய போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் மஹிந்த ராஜபக்ச தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால்தான் இந்நாடு வீழ்ந்தது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

” ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கொடியைக் கண்டாலேயே இந்த அரசாங்கத்துக்கு நடுக்கம் ஏற்பட்டு விடுகின்றது. கட்சியின் கொடிக்கே இவ்வளவு பயமெனில் நாமல் தொடர்பில் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு அச்சம் இருக்க வேண்டும்?

தற்போது வந்துள்ள பயம் தோல்வி பயமாகும். அந்த பயம் தொடரட்டும். எந்தவொரு கட்சியாலும் ஆட்சியில் நீடிக்க முடியாது. போரை முடிவுக்கு கொண்டுவந்த மஹிந்த ராஜபக்சகூட தோல்வி அடைந்தார். அது மக்களால் இழைக்கப்பட்ட பெறும் தவறு. அதனால்தான் இந்நாடு வீழ்ந்தது. கட்சி கொடியை பிடுங்குவதால் எமது பயணம் தடைபடாது. அடுத்த தேர்தலில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம். ” -எனவும் அவர் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article