” மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுதந்திரமாக கச்சத்தீவு செல்கின்றார். எனவே, படையினருக்காக ஜே.வி.பியும் குரல் கொடுக்க வேண்டும்.” – என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
” படையினருக்காக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். ஏனெனில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால்தான் ஜே.வி.பி. உட்பட அனைத்து கட்சிகளாலும் அரசியல் களத்தில் அரசியல் செய்ய முடிகின்றது. ஜனாதிபதியால் இன்று சுதந்திரமாக கச்சத்தீவுகூட செல்ல முடிகின்றது.
போரை முடிவுக்கு கொண்டுவந்து இருக்காவிட்டால் கச்சத்தீவு செல்வதற்கு பிரபாகரனின் அழைப்புக்காக காத்திருக்க வேண்டி வந்திருக்கும்.
கடற்படையினர்தான் கச்சத்தீவை பாதுகாக்கின்றனர். கடற்படை படகிலேயே ஜனாதிபதி கச்சத்தீவு சென்றார். ஜனாதிபதி அங்கு சென்றது மகிழ்ச்சி. ஆனால் முன்னாள் கடற்படை தளபதி சிறையில் உள்ளார். எனவே, சுதந்திரமாக செல்வதற்குரிய சூழ்நிலையை படையினரே ஏற்படுத்திக்கொடுத்தனர் என்பதை மறந்து விடக்கூடாது.” – எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்றது. இந்த காலப்பகுதிக்குள் என்ன நடந்துள்ளது என்பதை ஆட்சியாளர்களிடம்தான் கேட்க வேண்டும்.” – எனவும் அவர் கூறியுள்ளார்.