13.5 C
Scarborough

மஹா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களுக்கு விசேட வசதி

Must read

மஹா கும்பமேளாவில் தினமும் ஒரு இலட்சம் பக்தர்களுக்கு வழங்குவதற்குரிய வகையில் உணவு தயாரிக்கப்படுகிறது

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடைபெற்று வருகிறது. கடந்த 13ஆம் திகதி தொடங்கிய மஹா கும்பமேளா அடுத்த மாதம் 26ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

மஹா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமிருந்து  வருகைதருகின்ற பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகின்றனர். இதுவரை 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக பிரயாக்ராஜ் முழுவதும் அடிப்படை வசதிகளுடன் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், மஹா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்களுக்கு அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் மற்றும் அதானி குழுமம் இணைந்து உணவு வழங்குகின்றன. இதற்காக அதிநவீன சமையல் கூடத்தை திறந்துள்ளனர்.

இந்த சமையல் கூடமானது சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பாரம்பரிய முறையில் சமையல் செய்யும் வகையில் அடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மஹா கும்பமேளா நடைபெறும் 20 இடங்களில் உணவு விநியோகம் செய்யப்படுகிறது. மஹா கும்பமேளா நிறைவடையும் வரை இந்த மகா பிரசாத சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article