எலான் மஸ்க் தலைமையிலான முதலீட்டாளர்கள் குழு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தை சுமார் 97.4 பில்லியன் டொலருக்கு வாங்க முன்வந்துள்ளதோடு இது தொடர்பாக சட்ட ரீதியான நகர்வுகளை முன்னெடுத்துள்னர் .
ஆனால் இதற்கு ஓபன் ஏ.ஐ நிறுவனத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் சாம் அல்ட்மேன் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2015இல் ஓபன் ஏ.ஐ நிறுவனம் நிறுவப்பட்ட போது அதன் இணை நிறுவனராக மஸ்க் இருந்தார். இலாப நோக்கற்ற செயற்பாட்டில் இருந்து ஓபன் ஏ.ஐ நிறுவனம் இலாபத்தை நோக்கி மாறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. அதன் பின்னணியில் அந்த நிறுவனத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் சாம் அல்ட்மேன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஏ.ஐ சார்ந்த உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக சுமார் 500 பில்லியன் டொலர் வரை நிதி திரட்டவும் சாம் அல்ட்மேன் திட்டமிட்டுள்ளார். இந்தச் சூழலில் தான் மஸ்க் கொடுத்த 97.4 பில்லியன் டொலரை அவர் நிராகரித்துள்ளார். வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 97.4 பில்லியன் டொலருக்கு வாங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்