லுகேமியா நோயால் பாதிக்கப்பட்டு மறைந்த தந்தை ஒருவரின் இரு மகள்கள் அவரின் கனவை பூர்த்தி செய்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கனடாவில் பதிவாகியுள்ளது.
அதன்படி, முகமது அரிப் சாஹி (Choudry Mohammed Arif Sahi) என்பவரின் இரு மகள்களே இவ்வாறு தந்தையின் கனவை நனவாக்கியுள்ளனர்.
சாஹியின் மூத்த மகளான, 24 வயதான ஷப்நம் சாஹி (Shabnam Sahi), டொரோண்டோ மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திலும் (Toronto Metropolitan University) அவரது மூத்த சகோதரி சோனியா பஸக்வேல் (Sonia Passacquale) மற்றுமொரு பல்கலைக்கழகத்திலும் ஒரே வாரத்தில் பட்டம் பெற்றுள்ளனர்.
இவர்கள் இருவரும் தங்களது பட்டமளிப்பு விழாவின் போது தந்தை பற்றிய நினைவுகளை பகிர்ந்தமையும் நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
“வாழ்க்கை நம்பிக்கையற்றது அல்ல; கனவுகளை எப்போது வேண்டுமானாலும் சாதிக்கலாம்” என்பதையும் அவர்கள் கூறியுள்ளனர்.