16.4 C
Scarborough

மரக்கிளை விழுந்ததில் பெண் படுகாயம்!

Must read

டொராண்டோ மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீதியில் மரக்கிளை விழுந்ததில் 30-வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காஸா லோமா Casa Loma பகுதியில் உள்ள சென் கிளயார் அவன்யூ St. Clair Avenue West வீதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

ஒரு பெண் மற்றும் ஒரு பிள்ளை பெரிய மரக்கிளை வீழ்ந்து காயமடைந்தனர்” என்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் அவர்கள் 10 வயதுடைய சிறுமி ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளை என்றும், அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.

சம்பவத்தில் காயமடைந்த பெண் கடுமையான, உயிருக்கு ஆபத்தான நிலைமைக்குள்ளான காயங்களுடன் அருகிலுள்ள ஒரு விபத்து மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலத்த காற்று காரணமாக மரக்கிளை முறிந்து விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article