19.1 C
Scarborough

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

Must read

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

“இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் சிலரின் கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி, கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும்.

இயற்கையில் இப்படியான ஒளியை பார்க்கவே முடியாது. லேசர் உதவி மூலம் இந்த ஒளியை பார்த்தவர்கள், நீலம்-பச்சை கலந்த நிறத்தில் அந்த ஒளி இருந்ததாக கூறுகின்றனர்.

ஆனால் வழக்கமான நீலம் பச்சை நிறத்தை போல் அல்லாமல் இது வித்தியாசமாக இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள்.

மனிதர்கள் பார்க்காத நிறத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் மூளை அதை எப்படி புரிந்துக்கொள்ளும் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இதற்கு நாங்கள் ஓலோ (olo) என பெயரிட்டிருக்கிறோம்.என்று கூறியுள்ளனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article