இந்த ஆண்டு மத்தியரசு, பொதுச்சேவை ஊழியர்களுக்கான அலுவலக வேலைநாட்களை அதிகரித்துள்ளது.
திறைசேரிச் செயலாளரிடமிருந்து மத்தியரசு ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதங்களில், May 4, 2026-க்குள் உயர் அதிகாரிகள் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், ஏனைய அனைத்து ஊழியர்களும் July 6, 2026-க்குள் வாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது அலுவலகத்திற்கு வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு முக்கிய பொதுச்சேவைத் துறைகளுக்குப் பொருந்தும். ஏனைய தனியார் துறைகளையும் இதேபோன்ற நடைமுறையைப் பின்பற்றுமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
September 2024 முதல் அமுலில் உள்ள மத்தியரசின் Hybrid work விதிகளின்படி, தற்போது முக்கிய பொது நிர்வாகத்தில் உள்ள அரச ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களும், உயர் அதிகாரிகள் வாரத்திற்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை உள்ளது.
உங்கள் ஊழியர்களுக்கு போதுமான அலுவலக இடவசதி இருப்பதை உறுதி செய்ய, Public Services and Procurement Canada உங்களுடன் நெருக்கமாகச் செயற்படும், என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

