10.4 C
Scarborough

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு!

Must read

மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​படும் என அறி​வித்​துள்​ளது ஐசிசி. கடந்த முறை ரூ.11.65 கோடி மட்​டுமே வழங்​கப்​பட்ட நிலை​யில் தற்​போது பரிசுத் தொகை பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

13-வது ஐசிசி மகளிர் ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 30-ம் தேதி இந்​தி​யா​வில் தொடங்​கு​கிறது. நவம்​பர் 2 வரை நடை​பெறும் இந்​தத் தொடரில் 8 அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்​நிலை​யில் இந்​தத்தொடரின் மொத்த பரிசுத் தொகைரூ.122.50 கோடி​யாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இது 2022-ம் ஆண்டுநியூஸிலாந்​தில் நடை​பெற்ற உலகக் கோப்பை தொடரில் வழங்​கப்​பட்ட பரிசுத் தொகை​யை​விட 297 சதவீதம் அதி​க​மாகும். ஏனெனில் கடந்த முறை ஒட்​டுமொத்த பரிசுத் தொகை ரூ.31 கோடி​யாக மட்​டுமே இருந்​தது.

சாம்​பியன் பட்​டம் வெல்​லும் அணிக்கு ரூ.39.95 கோடி பரிசுத்தொகை வழங்​கப்பட உள்​ளது. இந்த வகை​யில் கடந்த முறை பட்​டம் வென்ற அணிக்கு ரூ.11.65 கோடி பரிசுத் தொகை வழங்​கப்​பட்​டிருந்​தது. 2-வது இடம் பிடிக்​கும் அணிக்கு ரூ.19.77 கோடி பரிசுத் தொகை கிடைக்​கும். இது கடந்​த​முறை ரூ.5.30 கோடி​யாக இருந்​தது. அரை இறு​தி​யில் தோல்வி அடை​யும் அணி​கள் தலா ரூ.9.89 கோடியை பெறும். 5 மற்​றும் 6-வது இடத்தை பிடிக்​கும் அணி​களுக்கு தலா ரூ.62 லட்​ச​மும், 7 மற்​றும் 8-வது இடத்தை பிடிக்​கும் அணி​களுக்கு தலா ரூ.24.71 லட்​ச​மும் பரிசுத் தொகை கிடைக்​கும்​.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article