20.7 C
Scarborough

மகளின் மணமேடையில் கண்கலங்கிய கிங்காங்!

Must read

நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்தை  ஜூலை 10 அன்று சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய மகள் கல்யாண கோலத்தில் இருக்கும்போது கிங்காங் சந்தோஷத்தில் பூரிப்பாக இருக்கிறார். அதோடு மகளுக்கு கல்யாணம் முடிந்து அடுத்த நொடி கிங்காங் ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கிறார்.

நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் கல்யாணத்திற்கு ஆக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் பலருக்கும் நேரில் சென்று திருமண பத்திரிக்கை கொடுத்து இருந்தார். மககிங் என்று சினிமா உலகில் பிரபலமாக இருக்கும் நடிகர் கிங்காங்கின் சொந்த பெயர் சங்கர் ஏழுமலை தான். ஆனால் சினிமாவில் அவர் கிங்காங் என்று கேரக்டரில் அறிமுகமானதால் அந்த பெயரிலேயே சினிமாவில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்த கிங்காங் அதிசய பிறவி படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் ஆடிய டான்ஸ் இப்போது பார்த்தால் கூட சிரிப்பை அடக்க முடியாத அளவிற்கு இருக்கும்.

ஆனாலும் தன்னுடைய மகள் திருமணம் மேடையில் கிங்காங் அமர்ந்திருக்கும் போது பதட்டத்துடனே அமர்ந்திருந்தார். மாப்பிள்ளை தாலி கட்டிய அடுத்த நொடி கிங்காங் ஆனந்த கண்ணீர் விட்டிருந்தார். அதுபோல அவருடைய மகளும் எமோஷனலாகி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது கிங்காங் மகளுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article