மியன்மாரில் கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இராணுவ ஆட்சி தான் நடைபெற்று வருகிறது.
அதன்படி இராணுவ ஆட்சித் தலைவராக மின் ஆங் ஹ்லைங் பதவி வகித்துள்ளார்.
இராணுவ ஆட்சி வந்ததும் ஆளுங்கட்சி தலைவர்களை கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
இதற்கு நாட்டு மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் பொதுத்தேர்தலை நடத்தக்கோரி போராட்டத்திலும் குதித்தனர்.
சுமார் 4 வருடங்களாகவே இப் போராட்டம் தொடரும் நிலையில், எதிர்வரும் டிசம்பர் மாதம் 28ஆம் திகதி பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என இராணுவ ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்