17.6 C
Scarborough

பொலிஸ் வாகனத்தை திருடிய நபர் கைது!

Must read

கனடாவில் பொலிஸ் வாகனமொன்றை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின், நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தில் பொலிஸாரின் அடையாளமுள்ள கண்காணிப்பு வாகனத்தை, 36 வயது நபர் திருடி, அதைக் கொண்டு நோவா ஸ்கோஷியா மாநில எல்லையை கடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் நியூ ப்ரன்ஸ்விக் மாகாணத்தின் சாக்வில்லில் இடம்பெற்றுள்ளது.

அந்த வாகனம் Trans Canada Highway வழியாக நோவா ஸ்கோஷியா நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் மூன்று மணியளவில் அந்த வாகனத்தை Highway 104 இல், அம்ஹெர்ஸ்ட் (Amherst), N.S. அருகே கண்டுபிடித்தனர்.

வாகனத்தின் டயர்களை சேதப்படுத்தி சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின் போது இரு போலீசாருக்கு எளிதான காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் குறித்த விவரங்கள் மற்றும் வாகனம் எவ்வாறு திருடப்பட்டது என்பதையும் போலீசார் தற்போது வரை வெளியிடவில்லை.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article