மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறையில் வைத்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
பொலிஸ் நிலையத்துக்குள் புகுந்து அவர், அத்துமீறும் வகையில் செயற்படும் காணொளி நேற்று வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரால் நபரொருவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருந்தார்.
அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் அரசியல் வாதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் வகையில் பல தடவைகள் குறித்த தேரர் செயற்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.