கனடாவில் கைது முயற்சியின் போது வான்கூவர் பொலிஸ் அதிகாரிகளை தீ வைத்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வான்கூவரில்(Vancouver) பொலிஸ் அதிகாரிகள் இருவரை தீ வைத்த வன்முறை சம்பவத்தில் 40 வயதுடைய ஜோர்டான் பால் கேம்பல் மியூச்சுவல்(Jordan Paul Campbell Mutual) என்பவர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வான்கூவர் காவல்துறை (VPD) வெள்ளிக்கிழமை இரவு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது, மேலும் சனிக்கிழமை காலை கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு டவுன்டவுன் ஈஸ்ட்சைட்(Downtown Eastside) பகுதியில் நடந்த சம்பவத்தில், ஒரு பொலிஸ் அதிகாரியை தாக்கியது மற்றும் பொலிஸ் அதிகாரியை தடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஜோர்டான் பால் கேம்பலை எதிர்கொள்கிறார்.
பாதசாரிகள் கடக்கும் விதிமுறைகளை மீறியதற்காக ஜோர்டான் பால் கேம்பலை கைது செய்ய முயன்ற அதிகாரிகள் மீது அவர் தீப்பிடிக்கக் கூடிய பொருளைப் பயன்படுத்தி அவர்களின் சீருடைகளை தீயிட்டு, பின்னர் தப்பிக்க முயன்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி ஒன்றின் கண்காணிப்பு வீடியோவில் குழப்பமான காட்சி பதிவாகியுள்ளது, இதில் ஆடைகள் தீப்பிடித்த ஒரு நபரை அதிகாரிகள் துரத்துவது தெரிகிறது.
பின்னர் அந்த வீடியோவில் அதிகாரிகள் சந்தேக நபரை கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது பார்க்க முடிகிறது.
இந்த சம்பவத்திற்கு முன்பு, ஜோர்டான் பால் பத்து நிலுவையில் உள்ள வாரண்டுகளில் தேடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற பதிவுகளின் படி, ஏப்ரல் 17 ஆம் திகதி வியாழக்கிழமை அவருக்கு பிணை விசாரணை நடைபெற உள்ளது.