6.2 C
Scarborough

பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கு முக்கியத்துவம் – யாழில் நடந்த அங்குரார்ப்பண நிகழ்வு!

Must read

வடக்கில் பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கன ஆசனம் ஒதுக்கல் தொடர்பன செயற்றிட்டத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தூர  சேவையை முன்னெடுக்கும் பேருந்து நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று (14) முற்பகல் இடம்பெற்றது

குறித்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் கைலாசபிள்ளை சிவகரன் கலந்து சிறப்பித்து குறித்த அங்குரார்ப்பண நிகழ்வின் பேருந்துகளில் ஸ்ரிக்கர் ஒட்டும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

யாழ் மாவட்டத்தில் இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இம் முயற்சியாக யாழ் மாவட்ட சர்வமதக் குழு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பொதுப் போக்குவரத்தில் மதகுருமார்களுக்கான ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான ஸ்ரிக்கர் பிரசாரம் யாழ் பஸ் நிலையத்தில் முன்னெடுக்கப்படது.

அனைத்து மதங்களுடன் சர்வமதத் தலைவர்களுக்கும் பாரபட்சமற்ற வகையில் சம முக்கியத்துவம் வழங்கப்படுவது அவசியமாகும் என இன்நிகழ்வின் பிரதம விருந்தினர் தனது உரையின்போது தெரிவித்தார்.

மேலும் இதனூடாகவே மத நல்லிணக்கத்தை வலுப்படுத்தி இன நல்லிணக்கத்தையும் உறுதிசெய்ய முடியும்.

ஆனால் இன்றை காலச் சூழலில் மதத் தலைவர்களுக்கு முக்கியத்துவம் என்ற நிலை சமூகத்தில். அருகிவிட்டதாகவே பார்க்க முடிகின்றது.

இவ்வாறான நிலையில் சமய தலைவர்களுக்கான முக்கியத்துவத்தை பொதும் போக்குவரத்து சேவையில் ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மாகாணம் தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த செயற்றிட்டம் வெற்றிபெற்று மதத் தலைவர்களுக்கான முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் என நம்புகின்றேன் என்றும் தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article