நிர்வாகக் கட்டமைப்பைக் குறைப்பதற்கும், பொது ஊழியர்கள் அலுவலகத்தில் செலவிடும் நேரத்தை அதிகரிப்பதற்குமான மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை இன்னும் இறுதி செய்யவில்லை என்று திறைசேரியின் தலைவர் Shafqat Ali தெரிவித்துள்ளார்.
பணியாளர்களைக் குறைப்பது மற்றும் மீண்டும் அலுவலகத்திற்குத் திரும்புவது தொடர்பான திட்டங்களை அரசாங்கம் இன்னும் இறுதி செய்து வருவதாக Ali கூறினார்.
அரசாங்கம் பொதுச் சேவையின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், நூற்றுக்கணக்கான மத்தியரசு ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். வேலை குறைப்பு குறித்த செய்திகள் புத்தாண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று பல துறைகள் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளன.
ஏற்கனவே எத்தனை பேருக்கு வேலையை விட்டு நீக்கப்படுவது குறித்து இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது, மற்றும் புத்தாண்டு தொடக்கத்தில் எத்தனை பேர் இச்செய்தியைப் பெறுவார்கள் என்று கேட்கப்பட்டபோது Ali அதற்குப் பதிலளிக்கவில்லை.
பிரதமர் இந்த விவகாரம் குறித்த தனது கருத்துக்களைப் பற்றி சில குறிப்புகளை மட்டுமே வழங்கினார். தனிப்பட்ட பொறுப்புகள் மற்றும் சேவை மூப்பு (Seniority) ஆகியவற்றைப் பொறுத்து, பொது ஊழியர்கள் அலுவலகத்தில் செலவிட வேண்டிய நேரத்தின் அளவு வெவ்வேறு நிலைகளில் நிர்ணயிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, 2024 செப்டம்பர் முதல் நடைமுறையில் உள்ள தற்போதைய விதியின்படி, பொது ஊழியர்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். உயர் அதிகாரிகள் (Executives) வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

