‘புஷ்பா 2’ இசைப் பணிகளில் என்ன நடந்தது என்பதை இசைமைப்பாளர் தமன் தெளிவுப்படுத்தி இருக்கிறார். ‘புஷ்பா 2’ படத்தின் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத்தும், பின்னணி இசையை சாம் சி.எஸும் மேற்கொண்டுள்ளார்கள். இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனிடையே, ‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசையில் தமனும் பணிபுரிந்திருந்தார். ஆனால், அவருடைய இசை படத்தில் இடம்பெறவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக தமன், “‘புஷ்பா 2’ படத்தில் 10 நாட்கள் பணிபுரிந்து, 3 பின்னணி இசைக் குறிப்புகளைக் கொடுத்தேன். அது படக்குழுவினருக்கு பிடித்திருந்தது. ஆனால், தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி.எஸ் ஆகியோர் பணிபுரிந்தார்கள். அது இயக்குநரின் முடிவுதான்” என்று தெரிவித்துள்ளார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா 2’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இப்படம் ரூ.1,800 கோடி அளவுக்கு வசூல் செய்து சாதனை புரிந்தது.