Ontario மக்கள் இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், அங்கு சில புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.
Ontario வில் வேலை தேடுபவர்கள், தாங்கள் விண்ணப்பிக்கும் வேலை பற்றிய கூடுதல் தகவல்களை இனி அறிந்துகொள்ள முடியும். வேலை வாய்ப்பு விளம்பரங்களில், எதிர்பார்க்கப்படும் ஊதியம் அல்லது ஊதிய வரம்பு இனி காட்சிப்படுத்தப்படும். மாகாண அரசின் அறிவுறுத்தலின்படி, இந்த ஊதிய வரம்பின் இடைவெளி $50,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்
இதன்மூலம் வேலை தேடுபவர்கள் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்று குழப்பமடையத் தேவையில்லை அத்துடன் சம்பளம் முன்கூட்டியே தெரிவதால், அந்த ஊதியத்திற்குப் பொருந்தக்கூடிய தகுதியுள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிப்பார்கள். இது நிறுவனங்களுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
முன்னர் படுக்கையறைகளுக்கு அருகில் மட்டும் carbon monoxide (CO) alarms இருந்தால் போதுமானது. ஆனால் புதிய விதிகளின் படி ஒவ்வொரு தளத்திலும் மற்றும் ஒவ்வொரு படுக்கையறைகளுக்கு அருகிலும் alarms இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாகாணங்களில் உரிமம் மற்றும் சான்றிதழ் பெற்ற மருத்துவப் பணியாளர்கள், Ontario வில் தங்களைப் பதிவு செய்துகொள்ளும் வரை, ஆறு மாதங்கள் பணிபுரிய அனுமதி வழங்கப்படுகிறது. மருத்துவர்கள் தவிர இப்போது பல் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட மேலும் 16 துறையினருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கிறது.
5 Littre வைன் கொள்கலன்களுக்குக் குறைந்தபட்ச விலை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைகளின் இணையதளங்களில் மது விற்பனைக்கென பிரத்யேக இடமும் இனி தேவையில்லை.
சொத்து உரிமையாளர்கள் தங்களது மதிப்பீட்டு விவரங்களை தபால் மூலம் பெறுவதற்கு பதிலாக, இனி மின்னஞ்சல் அல்லது இணையதளம் வழியாக Digital முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
இதைவிட, மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் கட்டுமானப் பணிகளில், 20 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமாகப் பணிபுரியும் பட்சத்தில், அங்கு இதயத்துடிப்பு மீட்டெடுப்பு கருவிகள் (Defibrillators) இருப்பது இனி கட்டாயமாகும்.

