7.3 C
Scarborough

புதுச்சேரி தேர்தல் : சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் புதிய சாதனை!

Must read

துச்சேரி யூனியன் பிரதேசத்தில் வியாழக்கிழமை (09) ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல்  வாக்களிப்பில் மக்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.

இங்கு 89.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது இது இந்தியாவில் நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் புதிய உச்சம் என்றும், புதுச்சேரியில் இதுவரை நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் இது புதிய சாதனை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கேரளம் -அசாம்- புதுச்சேரி யூனியன் பிரதேசம் -ஆகிய மூன்று மாநிலங்களுக்கு நேற்று சட்டப்பேரவை பேரவைக்கான பொதுத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது.

காலை 7 மணி அளவில் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை நடைபெற்றது புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் நடைபெற்ற தேர்தலில் காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.

தேர்தல் ஆணையத்தின் தகவலின் படி புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 89 2 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனையை படைத்திருப்பதாகவும், தபால் வாக்குகள் மூலம் 1.36 சதவீத வாக்குகள் அதிகரிக்க கூடும் என்றும் தேர்தல் அதிகாரியான ஜவகர் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இதுவே அதிகபட்ச வாக்குப்பதிவாகும்.‌

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article