5.4 C
Scarborough

புடினின் டில்லி பயணம் உறுதியானது: அமெரிக்கா கழுகுப்பார்வை!

Must read

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டத்தை ரஷ்ய வெளி​யுறவு அமைச்சர் செர்ஜி லாவ்​ரோவ், அறி​வித்​தார்.

” ரஷ்ய ஜனாதிபதி டிசம்​பரில் இந்​தி​யா​வுக்கு வருகை தரு​வதற்​கான திட்​டங்​கள் வகுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

ராணுவ ஒத்​துழைப்​பு, தொழில்​நுட்ப பரி​மாற்​றம், நிதி, மனி​தாபி​மான உதவி, சுகா​தா​ரம் மற்​றும் செயற்கை நுண்​ணறிவு போன்ற உயர்​தொழில்​நுட்ப துறை​களில் இணைந்து பணி​யாற்​று​வதற்​கான திட்​டங்​கள் இந்த சந்​திப்​பின்​போது முன்​னெடுக்​கப்​படும்.” எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்​தியா தனது வர்த்தக உறவு​கள் குறித்த முடிவு​களை சுய​மாக மேற்​கொண்டு வரு​கிறது. ரஷ்​யா​வுட​னான வர்த்தக உறவு​களில் இந்​தியா முற்​றி​லும் திறமை​யான வகை​யில் முடிவு​களை எடுத்து வரு​கிறது.

இந்​தி​யா​வுக்​கும், ரஷ்​யா​வுக்​கும் இடையி​லான பொருளா​தார கூட்​டாண்மை அமெரிக்​கா​வால் அச்​சுறுத்​தலுக்கு ஆளாக​வில்​லை. ஏனெனில், இந்​தியா எந்த அழுத்​தத்​துக்​கும் அடிபணி​யாமல் தனது சொந்த விருப்​பப்​படி சர்​வ​தேச கூட்​டாளர்​களை தேர்ந்​தெடுக்​கிறது.

ஐ.நா. பாது​காப்பு கவுன்​சிலில் நிரந்தர இடம் பெறு​வதற்​கான பிரேசில், இந்​தி​யா​வின் முயற்​சியை ரஷ்யா ஆதரிக்​கிறது. தற்​போது மாறிவரும் உலகளா​விய நில​வரங்​களுக்கு ஏற்ப ஐநா பாது​காப்பு கவுன்​சில் சீர்​திருத்​தம் செய்​யப்பட வேண்​டும் என்​பதே ரஷ்​யா​வின் நிலைப்​பாடு எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article