13.5 C
Scarborough

பிளாக்மெயில்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த உதவி

Must read

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஆக. 1-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், வசந்தபாலன், ஆதிக் ரவிச்சந்திரன், தயாரிப்பாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் அமல்ராஜ் பேசும்போது, “இந்தப் படத்தின் ஹீரோ ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்து கடைசி 8 நாட்கள் மட்டும் ஷூட்டிங் முடியாமல் இருந்தது. அதற்கு பக்கபலமாக இருந்து உதவி செய்தவர் ஜி.வி.பிரகாஷ். படத்துக்காக அவர் பாதி சம்பளம்தான் வாங்கி இருக்கிறார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டப்பிங் முடித்து இசை வெளியீடு வரைவந்திருக்கிறார். அவருக்கு என்றுமே கடமை பட்டிருக்கிறேன்” என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article