பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். பிஹைண்ட்வுட்ஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவா ஆகியோரின் நிகழ்ச்சிகளுடன், பல நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மான் தாடியுடன் தோன்றினார். அவரது இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

