15.1 C
Scarborough

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

Must read

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும், எனினும், நீண்ட கால சவால்கள் உள்ளதாகவும் அந்நாட்டு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பொருளாதார வல்லுநர்கள் இந்த காலகட்டத்தில் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 வீதம் வீழ்ச்சியடையும் என்று கணித்திருந்தனர், ஆனால் டிசம்பரில் எதிர்பார்த்ததை விட 0.4 வீத வளர்ச்சியால் காலாண்டு உயர்த்தப்பட்டது.

2023 இல் 0.4 வீத வளர்ச்சிக்குப் பிறகு 2024 முழுவதும் மொத்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.9 வீதம் வளர்ச்சியடைந்தது.

ஆனால் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, தேசிய தனிநபர் உற்பத்தி கடந்த ஆண்டு 0.1 வீதம் சரிந்துள்ளது, இது வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பொது நிதிகளில் தொடர்ந்து அழுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது.

தரவுகளுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் சற்று வலுப்பெற்றது.

டிசம்பர் மாத வளர்ச்சி பிரித்தானியாவின் பெரிய சேவைத் துறையின் வலுவான செயல்திறனைப் பிரதிபலித்தது, மொத்த விற்பனையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், பப்கள் மற்றும் பார்கள் சிறப்பாகச் செயல்பட்டன.

அதே போல் இயந்திர உற்பத்தியாளர்கள் மற்றும் மருந்து நிறுவனங்களும் சிறப்பாகச் செயல்பட்டன என்று தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வளர்ச்சி அரசாங்க செலவினங்களையும், நிறுவனங்களின் சரக்குகளில் தற்காலிகமாக அதிகரிப்பையும் சார்ந்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அதே நேரத்தில் வணிக முதலீடு காலாண்டில் 3.2 வீதம் குறைந்துள்ளது. வணிக முதலீட்டில் ஏற்பட்ட வீழ்ச்சி போக்குவரத்து உபகரணங்களால் உந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article