15.1 C
Scarborough

பிராம்ப்டனில் சொகுசு வாகனம் திருட்டு – ஒருவர் சிக்கினார்

Must read

பிராம்ப்டனில் உள்ள ஒரு சொகுசு வாகன வாடகை நிறுவனத்தில் நுழைந்து, பல வாகன சாவிகளை மற்றும் இரண்டு விலையுயர்ந்த வாகனங்களை திருடிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு சந்தேகநபர் இன்னும் பிடிபடவில்லை என்றும் பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் 2023 நவம்பர் 4ஆம் திகதி இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2022 GMC SUV மற்றும் 2022 ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்கள் இவ்வாறு களவாடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 750,000 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீண்ட விசாரணையின்” பின், இந்த வாகனங்கள் இரண்டும் வெளிநாடுகளுக்குப் இரகசியமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 26 வயதான நிகில் சித்து (Nikhil Sidhu) என்ற நபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article