பிராம்டண் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன்க்கு அண்மையில் ஒரு கொலை மிரட்டலுக்கு இலக்காகி இருந்தார். இதனால் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பொலிசார் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு முன்னர் முதல்வரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அவரது மனைவி மற்றும் மகன் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உண்மை என்னவென்றால், முதல்வருக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும் எதிராக விடுக்கப்பட்ட ஒரு அச்சுறுத்தலை நாங்கள் பெற்றுள்ளோம், அதை விசாரித்து வருகிறோம். எனவே, அந்த அச்சுறுத்தலின் தன்மை காரணமாக, மிகுந்த எச்சரிக்கையுடன், அவருக்கு பொலிசார் பாதுகாப்பை வழங்குவது புத்திசாலித்தனம் என்று நாங்கள் உணர்ந்தோம் என்று Peel பிராந்திய பொலிஸ் துணைத் தலைவர் Nick Milinovich கூறினார்.
பேட்ரிக் பிரவுன்க்கும் அவரது வீட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்பு இரண்டு வாரங்கள் நீடித்ததாகவும், விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக, பொலிசார் பாதுகாப்பு வழங்கியதிலிருந்து பின்வாங்கியதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், விசாரணைகள் தொடர்ந்து வருவதாகவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை பற்றி அதிகம் பொலிஸ் தரப்பு தகவல் எதையும் வெளியிடவில்லை, ஆனால் அச்சுறுத்தல் கனடாவிற்குள் இருந்து வந்ததை மட்டும் பொலிசார் உறுதிப்படுத்தினார்.
இதுபற்றி கருத்து வெளியிட்ட பேட்ரிக் பிரவுன், நடந்து வரும் விசாரணையில் தலையிட விரும்பவில்லை என்றாலும், Peel பிராந்திய காவல்துறை மீது தனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.