ரஷ்யாவை கட்டுப்படுத்த உக்ரைன்தான் ஒரே வழி என்று கூறி, உக்ரைனுக்குத் தேவையான இராணுவ உதவிகளை ஐரோப்பிய நாடுகள் செய்ய வேண்டும் என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி கூறிய கருத்தை ரஷ்ய ஜனாதிபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக புதின் கூறுகையில்
“ஒரு காலத்தில் எங்கள் நாட்டை பிரான்ஸ் கைப்பற்ற முயன்றது. ஆனால், பிரான்ஸால் முடியவில்லை. எதிர்காலத்திலும் இது முடியாது. ஏனெனில் எங்களிடம் துணிச்சலான வீரர்கள் இருக்கிறார்கள். 1812 ஆம் ஆண்டு ரஷ்யாவை கைப்பற்ற முயன்ற நெப்போலியன் கடைசியில் தோற்றுத்தான் போனார். போரின் முடிவை மறந்து மீண்டும் ரஷ்யாவை வெற்றிகொள்ள நினைப்பதில் அர்த்தம் இல்லை” என்று கூறியுள்ளார்.