நாளை ஜனவரி 29 ஐ கியூபெக் சிட்டி மசூதி தாக்குதல் நினைவு நாளாகவும் இஸ்லாமிய விரோதத்திற்கு எதிரான செயற்பாட்டு நாளாகவும் பிரம்ப்டன் நகரம் அனுஷ்டிக்கிறது.
இழந்த உயிர்களை நினைவுகூரவும், இஸ்லாமிய விரோதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கவும், சிந்தனை, பிரார்த்தனை மற்றும் உரையாடலுக்கான ஒரு மாலை நிகழ்விற்கு பிரம்ப்டன் நகர மன்றத்தில் கூடுமாறு குடியிருப்பாளர்களை பிரம்ப்டன் நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இந்த கூடுகை நினைவுகூரல், ஒற்றுமை மற்றும் அனைவருக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கான தொடர்ந்த செயற்பாடுகளை ஆதரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

