கடனாவில் பிரபல ஊடகவியலாளர் ட்ரவிஸ் தன்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கனடாவின் முதனிலை ஊடக நிறுவனமொன்றில் கடமையாற்றி வந்த தன்ராஜ், பணி அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளார்.
உள ரீதியாக தம்மை பதவி விலகுமளவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நீண்ட அனுபவம் கொண்ட தன்ராஜ், சீ.பி.சீ ஊடகத்தின் சிரேஸ்ட ஊடகவியலளாராகவும் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
எனினும் அரசியல் நிகழ்ச்சிகளை சுயாதீனமாக முறையில் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தன்ராஜ் இந்திய பூர்வீகத்தைக் கொண்ட கனடாவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தன்ராஜின் குற்றச்சாட்டுக்களை சீ.பி.சீ ஊடகம் முற்று முழுதாக நிராகரித்துள்ளது.