டியூட்’ படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் படம் ‘டியூட்’. தீபாவளிக்கு வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 25) பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது படக்குழு. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்தின் தமிழக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
இப்படத்தில் பிரதீப் ரங்கநதானுடன் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இருவரும் பைக்கில் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் ‘டியூட்’ படத்தில் அவர் நடித்திருப்பது உறுதியாகி இருக்கிறது. முழுக்க காமெடி கலந்த காமெடி படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இதில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்ட பலர் பிரதீப் ரங்கநாதனுடன் நடித்து வருகிறார்கள். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மி, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் உள்ளிட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். பிரதீப் ரங்கநதானின் பிறந்த நாளுக்காக வெளியிடப்பட்ட போஸ்டர்களிலும் தீபாவளி வெளியீடு என்பதை படக்குழு உறுதிப்படுத்தி இருக்கிறது.