9.7 C
Scarborough

பிரதான உரைகள் ரத்து: எதிர்ப்பலைகளுக்கு மத்தியிலும் லண்டன் பயணத்தை கைவிடாத நாமல்!

Must read

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச லண்டன் சென்றடைந்துள்ளார்.

லண்டனில் அவர் பௌத்த விகாரையில் வழிபடுவது தொடர்பான படங்களை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

முக்கிய இரு உரைகள் மற்றும் சில சந்திப்புகளுக்காக நாமல் ராஜபக்ச லண்டன் செல்வதற்கு திட்டமிட்டிருந்தார்.

எனினும், நாமலின் லண்டன் உரைகளுக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் திட்டமிடப்பட்ட போராட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union நாமல் ராஜபக்சவின் உரையை ரத்து செய்திருந்தது.

இந்நிலையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் Oxford Union நாமல் ராஜபக்சவின் உரை நிகழ்வை ரத்துச் செய்துள்ளது.

தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்ட் யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு இரு பிரதான உரைகள் இரத்து செய்யப்பட்டிருந்தாலும் நாமல் ராஜபக்ச திட்டமிட்டவாறு லண்டன் சென்றுள்ளார்.

100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் லண்டன் பௌத்த விஹாரையில் அவர் வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

புலம்பெயர் பிரிவினைவாதக் குழுக்களின் அழுத்தங்களுக்கு நாமல் அடிபணியமாட்டார் என மொட்டு கட்சி உறுப்பினர்கள் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article