ஏப்ரல் 28 ஆந் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை பிரதமர் மார்க் கார்னி ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒத்திவைத்த நாடாளுமன்றம் மார்ச் 24 ஆந் திகதி மீண்டும் கூடவுள்ள நிலையில் அதற்கு முதல் நாளான மார்ச் 23 ஆந் திகதி ஆளுநரிடம் நாடாளுமன்றத்தை கலைக்க கோருவார் என நம்பப்படுகிறது.
நாடுமுழுவதும் கட்சிகள் தங்கள் அலுவலகங்களை அமைத்து உள்ளூர் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தயாராகி வருகின்றன. லிபரல் கட்சியும் தேர்தலுக்காக நீண்ட நிகழ்ச்சி நிரலுடன் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் திட்டங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளிவரவில்லை. இதனிடையே அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகக் கொள்கைகள் கனேடியர்கள் மத்தியில் லிபரல்களின் கொள்கைகளுக்கான ஆதரவை பலப்படுத்தியுள்ளதாக கருதப்படுகின்றது.
அண்மைய Angus Reid Institute இன் கருத்துக் கணிப்பின் படி கன்சர்வேட்டிவ்கள் மற்றும் அதன் தலைவர் பியர் பொய்லிவ்ரே விட ஐந்து புள்ளிகள் அதிகமான ஆதரவுடன் லிபரல்களின் ஆதரவு 42 ஆக சதவீதமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. கனேடியர்கள் மத்தியில் பிரதமர் கார்னிக்கு அதிகரித்துள்ள ஆதரவும் லிபரல்களின் ஆதிக்கத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.