5.3 C
Scarborough

பிரதமரின் உலகளாவிய பயண அட்டவணைக்கு கலவையான விமர்சனங்கள்!

Must read

பிரதமர் March மாதத்திற்குப் பின்னர் மேற்கொண்ட 13 வெளிநாட்டுப் பயணங்களில் British தலைநகருக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும். இந்த வாரம் பிரதமர் Mark Carney மீண்டும் London க்கு சென்றுள்ளார், இந்நிலையில் அவரது உலக சுற்றுப்பயண அட்டவணை விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

March 14 அன்று பதவியேற்றதிலிருந்து Carney ஐரோப்பாவிற்கு ஐந்து பயணங்களையும், அமெரிக்காவிற்கு இரண்டு பயணங்களையும், ஒரு தடவை Mexico விற்கும் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தப் பயண அட்டவணை, பிரதமரை சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் Conservative தலைவர் Pierre Poilievre இன் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. ஒருதடவை U.K சென்ற பிரதமர் Jet விமானத்தில் திரும்பி வந்துள்ளார், அதேநேரம் நாட்டில் பணவீக்கம் மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் அதிகரித்து வரும் நேரத்தில் Carney வெளிநாடுகளில் சுற்றித்திரிகிறார், என்றும் Poilievre விமர்சித்தார்.

இருப்பினும், ஒரு சர்வதேச விவகார நிபுணர், அமெரிக்காவின் வர்த்தக உறவு பெரியளவு நம்பகத்தன்மையற்றதாக மாறி வருவதால், பல வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காகவே Carney தான் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கிறார் என்று கூறியுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article