பிணைக் கைதிகள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகும் நீடிக்கிறது.
தங்கள் நாட்டில் இருந்து காசா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்ற பிணைக்கைதிகளை மீட்க அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
அவர்களில் பலரை ஒப்பந்த அடிப்படையிலும், இராணுவ நடவடிக்கை மூலமும் இஸ்ரேல் மீட்டுள்ளது. பிணைக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுத குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டன.
தற்போது, பிணைக் கைதிகள் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
காசாவில் பிணைக் கைதியாக இருந்த யாயர் யாகோவின் உடலும், மற்றொரு பிணைக் கைதியின் உடலும் மீட்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலின் அனைத்து குடிமக்களுடனும் சேர்ந்து, அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம். எங்கள் அனைத்து பிணைக்கைதிகளும், உயிருடன் இருப்பவர்களும், வீழ்ந்தவர்களும் வீட்டிற்கு கொண்டு வரும் வரை நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம் இவ்வாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மேலும் தெரிவித்துள்ளார்.