இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட டோனி, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
டோனியின் மனைவி சாக்ஷி சிங் ‘டோனி என்டெர்டெயின்மென்ட்’ என்ற பட நிறுவனத்தை தொடங்கி, தமிழில் ஹரிஷ் கல்யாண்-இவானா நடித்த ‘எல்.ஜி.எம்.’ படத்தை தயாரித்தார்.
இதற்கிடையில் நடிகர் மாதவனும், டோனியும் துப்பாக்கி ஏந்திய வீரர்களாக நடித்துள்ள ‘தி சேஸ்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆனால் இது ஒரு விளம்பரத்துக்கான டிரெய்லர் தான் என்றும், ஆவணப்படமாக இருக்கலாம் என்றும் விவாதம் எழுந்துள்ளது.
இதனால் டோனி நடிகராக களமிறங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. ஆனால் நிச்சயம் பாலிவுட் சினிமாவில் டோனி கால்பதிக்கத்தான் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வசன் பாலா இயக்கும் இந்த புதிய படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது டோனி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.