ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய புரட்சிகர பொலிஸ் படையின் (ஐஆர்ஜிசி) தலைமையகத்தை அழித்துவிட்டதை ‘பாம்பின் தலை வெட்டப்பட்டது’ என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டாக ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளன. இந்த தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் கொமெய்னி, அவரது குடும்பத்தினர், ஈரானின் முக்கிய தலைவர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் நட்பு நாடுகளாக உள்ள பஹ்ரைன், ஜோர்தான், குவைத், கட்டார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது.
“கடந்த 47 ஆண்டு காலத்தில் ஐஆர்ஜிசி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை கொன்றுள்ளது. இந்நிலையில், நேற்று அமெரிக்கா மேற்கொண்ட பெரிய அளவிலான தாக்குதலில் பாம்பின் (ஐஆர்ஜிசி) தலை வெட்டப்பட்டது. இதன் மூலம் இனி ஐஆர்ஜிசி-க்கு தலைமையகம் என்பது இருக்காது. பூமியில் மிகவும் சக்தி வாய்ந்த இராணுவப்படையை அமெரிக்கா கொண்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல் தொடரும்” என அமெரிக்க இராணுவம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது

