கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸின் சுவாசக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுவாசத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறும்போது,
பாப்பரசரின் சுவாசக் குழாயில் பக்றீரியா, பூஞ்சை என பல வகையான தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றும் நேற்று (17) நடந்த பரிசோதனைகளின் முடிவில், அவருக்கு சுவாசக் குழாயில் கலவையான தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.