‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே பாகமாக ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த நிலையில், பாகுபலி பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் சேர்த்து ஒரே படமாக “பாகுபலி த எபிக்” என்ற பெயரில் வருகிற அக்டோபர் மாதம் 31ஆம் திகதி திரையரங்குளில் வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.